1980ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’படத்தின் மூலம் அறிமுகமாகி சுமார் 25 ஆண்டுகாலம் தமிழ்,தெலுங்கு சினிமாவின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி சுமார் 13 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.

’80 மற்றும் 1990களில் ரஜினி படங்களுக்கு இணையாக ஆக்சன் படங்களை கொடுத்தவர் விஜயசாந்தி.எனவே இவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தனர்.இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த பல படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்திய சினிமாவில்  கதாநாயகர்களை விட அதிக சம்பளம் வாங்கிய பெருமை கொண்ட ஒரே நடிகை விஜயசாந்திதான்.தமிழில்  மன்னன் படத்தில் ரஜினியுடன் நடித்தபோது ரஜினிக்கும் இவருக்கும் ஒரே தொகை சம்பளமாகத் தரப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 80 துவங்கிய விஜய சாந்தியின் சூறாவளி சினிமா பயணம் 20 ஆண்டுகள் வரை களைகட்டியது.

அதன்பின் தீவிர அரசியலில் இறங்கியதால் சினிமாவை விட்டு விலகினார்.கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த ‘நாயுடம்மா’ படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும்.தற்போது கிட்டதட்ட 13ஆண்டுகள் கழித்து மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவுள்ள ‘சரிலேரு நீக்கெவெரு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குனர் அனில் ரவிப்புடி இயக்கவுள்ளார்.அதே பழைய ஆக்சன் விஜயசாந்தியை என்னால் பார்க்க முடிகிறது. அதே நேரம் தவறாமை, அதே பணிவு, அதே ஆளுமை என அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாக் செய்தியை தெரிவித்துள்ளார். இன்று அவர் மேக் அப் போடும் ஒரு ஸ்டில் வலைதளங்களில் வைரலாக விஜயசாந்திக்கு இந்தியா முழுவதிலிமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.