உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தான் ஐ.சி.யு. பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும் கூட தனக்கு ஹீரோ ஒருவர் தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி வந்ததாக பிரபல நடிகை விஜயலட்சுமி போலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருபவர்விஜயலட்சுமி. தமிழில் ’பூந்தோட்டம்’படத்தில் தேவயானி தங்கையாக நடித்த இவர், ’ஃபிரண்ட்ஸ்’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.’பாஸ் என்கிற பாஸ்கரன்’படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் ’மீசைய முறுக்கு’படத்தில் நடித்திருந்தார்.

பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமி, சில தினங்களுக்கு முன்பு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இவர் இங்கு அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இவரது அம்மாவும் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது  மருத்துவச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் தவித்து வநதனர் . இதுகுறித்து விஜயலட்சுமி சகோதரி உஷா தேவி,’இருந்த பணத்தை அம்மாவின் சிகிச்சைக்கு செலவு செய்துவிட்டோம். இப்போது விஜயலட்சுமியையும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக, கன்னட சினிமா துறையினரிடம் பண உதவியை எதிர்பார்க்கிறோம்’என ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதையடுத்து கன்னடத் திரைத்துறையினர்  சிலர் அவருக்கு உதவி வந்தனர். இந்நிலையில் கன்னட நடிகர் ரவி பிரகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று, விஜயலட்சுமியிடம் நலம் விசாரித்துவிட்டு, ரூ.1 லட்சம் உதவி செய்தார். உதவி செய்தவருக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதில் போலிஸில் புகார் செய்யும் நிலைக்கு விஜயலட்சுமி தள்ளப்பட்டார். 

நேற்று  ரவி பிரகாஷ் மீது புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளார். அதில் ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை சந்திக்க கடந்த மாதம் 27- ஆம் தேதி நடிகர் ரவி பிரகாஷ் வந்தார். அப்போது எனக்கு ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்பிறகுஎனது செல்போனுக்கு தொடர்ந்து மெசேஜ்அனுப்பியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடு த்து வருகிறார்என்று கூறியிருந்தார். இது கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நடிகை விஜயலட்சுமியின் புகாரை மறுத்துள்ளார் ரவி பிரகாஷ்.மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு உதவிதான் செய்தார். எந்த தொல்லையையும் நான் அவருக்கு கொடுக்கவில்லை. அவருக்கு உதவி செய்தது என் தவறு. இதுபற்றி போலீசாரிடம் விளக்கம் அளித்து விட்டேன்\ என்று தெரிவித்தார்.கடந்த 10 வருடத்துக்கு முன், ரம்யா சைத்ரா காலாமேகாவே மேகாவேஆகிய படங்களில் ராம் என்ற பெயரில் ஹீரோவாக நடித்தவர் ரவி பிரகாஷ். அந்த படங்கள் ஹிட்டாகாததால், தனது பெயரை ரவி பிரகாஷ் என்று மாற்றி நடித்து வருகிறார்.