நடிகை வரலட்சுமி, தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட, அழுத்தமான குணசித்திர வேடங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

அந்த வகையில் கடந்த வருடம் இவர் தேர்வு செய்து நடித்த, விக்ரம் வேதா, சத்யா, உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. இந்நிலையில் தற்போது இவர் கையில் ஒரு டசன் படங்களை வைத்துள்ளார்.

மேலும் நடிப்பை தவிர, திரையுலகை சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்படுவதற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

வரலட்சுமி செயல்:

இந்நிலையில் இவர் செய்துள்ள செயலுக்கு பலர் இவரை பாராட்டி வருகிறார்கள். அப்படி என்ன செய்தார் தெரியுமா?. இவர் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, அரசு பள்ளி மாணவர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார். 

உடனடியாக காரை நிறுத்தி அந்த மாணவர்களையும் தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு, அனைத்து மாணவிகளின் வீட்டிலும் அவர்களை அழைத்து சென்று விட்டு விட்ட பின் தான் இவர் வீட்டிற்கு கிளம்பினாராம். 

பள்ளி மாணவிகளுடன் காரில் சென்றபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை இவர் பதிவிட்டு, "இந்த மாணவிகளை நினைத்து பெருமை படுவதாகவும். தினமும் இவர்கள் பள்ளி செல்வதற்காக 7 கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள். இவர்களுடன் காரில் ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டில் விட செல்வது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அவர்களை நினைத்தால் என் இதயம் உருகுகிறது. இந்த தருணத்தை விவரிக்க வார்த்தை இல்லை என கூறியுள்ளார். இவரின் இந்த செயலை பார்த்து பலர் இவரை வாழ்த்தி வருகிறார்கள்.