நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த வருடத்தில் மட்டும் அதிகபட்சமாக ஐந்து படங்களில் நடித்த டாப் 3 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இவரைப் பொருத்தவரையில் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவருடைய திருமணம் குறித்து, பல வதந்திகள் பரவி வரும் நிலையில், வருடத்தின் கடைசியில் மீண்டும் திருமணம் குறித்து  வதந்தி ஒன்றை யாரோ பரப்பி விட,  இதற்கு வரலட்சுமி சரத்குமார் அவருடைய பாணியிலேயே மிகவும் கோபமாக பதில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் விரைவில் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது என வதந்தி பரவியது. செய்தியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, இதுபோல் வதந்திகளை பரப்புகிறார்கள்.  நான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன். சினிமாவில் தான் இருப்பேன்.  இதுபோல் வதந்தி பரப்பும் கழுதைகளை எட்டி உதைப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.