விஷாலை காதலிப்பதாக பல வருடங்களாக, கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகை வரலட்சுமி தற்போது தன்னுடைய மனதில் உள்ள ஆசையை வெளிப்படையாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

'போடா போடி' படத்தில் ஹீரோயினாக வரலட்சுமி அறிமுகமாகி இருந்தாலும், இவரால் தமிழில் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை. இதனால் தற்போது வில்லி, குணச்சித்திரம் என வெயிட்டான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தேர்வு செய்து நடித்து வரும் கதாப்பாத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வருகிறது.

வரலட்சுமி சரத்குமார், பல வருடங்களாகவே தன்னுடைய சிறு வயது நண்பனும்,  நடிகருமான விஷாலை காதலித்து வருவதாக கோலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. 

அதற்கு ஏற்ற போல் இருவரும் இணைந்து பல விழாக்களில் கலந்து கொண்டனர். எனினும் இருவரும் தங்களுடைய காதலை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் விஷால், அனிஷா என்கிற நடிகையை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதனால் விஷால் - வரலட்சுமி இருவரும் காதலிக்க வில்லை என்பது உறுதியானது. 

இந்நிலையில் வரலட்சுமி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தனக்கு பிரபல நடிகர் பிரபாஸ் மீது கிரஷ் உள்ளதாக கூறியுள்ளார்.   மேலும் அவரிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக கூறி தன் மனதில் உள்ள ஆசையை சிறிது கொண்டேனா வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .