நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலக்ஷ்மி சரத்குமார், 'போடா போடி' மற்றும் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துள்ளார் இந்த படத்திற்காக இவரை பலரும் பாராட்டினர்.
தற்போது இவர் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டி, கேரளாவில் உள்ள கன்னூர்அகத்தியர் ஆஸ்ரமத்தில் தனது அம்மாவுடன் சென்று சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
வரலட்சுமியின் தந்தை சரத்குமார் ஜெயலலிதாவின் தோழமை கட்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
வரலட்சுமியின் இந்த செயல் பலரையும் யோசிக்க வைத்துள்ளது, தற்போது காதல் பிரிவில் உள்ள வரலட்சுமி, இப்போது முதல் முறையாக இப்படி செய்துள்ளது அரசியல் நோக்கத்தோடா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் .
ஆனால் மற்றொரு தரப்பினர் இளம் நடிகையான இவரின் செயலை பார்த்து பாராட்டியும் வருகின்றனர்.
