இந்தியாவில் இதுவரை இந்த கொடூர வைரஸிற்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் இடையே மேலும் அச்சத்தையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பாரத பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

ஆனால் இதை எல்லாம் காதில் வாங்காமல்... கொரோனா எல்லாம் எனக்கு வராது என்ற மனநிலையில் இளைஞர்கள் கூட்டம் ஒன்று ஜாலியாக ஊர் சுற்றி வருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வாருங்கள் என அரசு அறிவித்துள்ள போதும், ஏதோ ஊர் சுற்ற லீவு விட்ட மாதிரி கூட்டம், கூட்டமாக கிளம்பி வந்துவிடுகின்றனர். 

இப்படி சுயக்கட்டுப்பாடும், சமூக பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் சுற்றுபவர்களை எச்சரிக்கும் விதமாக நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "வணக்கம் நீங்கள் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில தான் இருக்கேன். சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். ஏற்றுக்கொள்வதென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். கொரோனாவாவது டேஷ் ஆவது என ஒரு குரூப் சுற்றி கொண்டிருக்கிறது. அவர்களிடம் தான் பேசுகிறேன். கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அறிக்கை படி 27 சதவீதம் மக்கள் தான் வீட்டில் இருக்காங்க. மத்தவங்க வெளியில் தான் சுத்திக்கிட்டு இருக்காங்க. 

இதன் ஆபத்து யாருக்கும் புரியமாட்டேங்குது. Contagionனு ஒரு படம் இருக்கு அதை பார்த்தாலே உங்களுக்கு புரியும். இரண்டாவது வீட்டுக்கு அருகில் இருக்கும் பெரியவர்களுக்கு உதவுங்கள். அவர்களுக்கு தான் அதிகம் பாதிப்பு வருகிறது. மூன்றாவது வாடகை வீடு முதலாளிகளுக்கு சொல்கிறேன்.. யாருக்குமே வேலை தற்போது இல்லை, பலருக்கும் சம்பளம் வராது. அதனால் ஒரு மாதம் மட்டும் வாடகையை தள்ளுபடி செய்யுங்கள்.

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

தற்போது நமக்கு இருப்பது இரண்டு சாய்ஸ் மட்டும் தான். ஒன்று இப்படியே வெளியே சுற்றிக்கொண்டு இந்தியா முழுவதும் நோய் வந்து சாவது. இரண்டாவது ஒரு மாதம் மட்டும் வீட்டில் இருப்பது. அதன் பிறகு வேளைக்கு போகலாம், மீண்டும் புதிதாக துவங்கலாம். இத்தாலி போல இந்தியா சிறிய நாடு இல்லை, விளைவுகள் மிக பெரியதாக இருக்கும். அதனால் கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணுங்க" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.