சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போலவே மலையாளத்தில் ஜீவிதம் என்ற நிகழ்ச்சியை ஊர்வசி நடத்தி வருகிறார். 

இந்த நிகழ்ச்சிகளில் கோபப்பட்டு பேசுவது வழக்கமான ஒன்று தான். என்றாலும் நடிகை ஊர்வசி கொஞ்சம் அளவிற்கு அதிகமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தரக்குறைவாக திட்டியுள்ளார்.

அதனால் கலந்து கொண்டவர் மனித உரிமை கழகத்தில் நடிகை ஊர்வசி போதையில் தங்களை தரைகுறைவாக திட்டியதாக புகார் அளிக்க தற்போது அந்த சேனலுக்கும், ஊர்வசிக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

மேலும் ஊர்வசி இன்று வெளியாகும் கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவது போல நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.