மற்ற காட்சிகள் எவ்வளவு சொதப்பலாக இருந்தாலும் அட்லீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸாவது நச்சென்று இருக்கவேண்டும் என்பதுபோல் தனது ஆட்சியின் இறுதியில் மோடி மேற்கொண்ட கேதார்நாத் குகை தியானம் செம ஹிட்டடித்துள்ளது. அதுதான் நெட்டிசன்களின் மத்தியில் தற்போதைய ஹாட் டாபிக்.

அக்குகை மிகவும் புனிதமான இடம் என்று பா.ஜ.கவினரால் பில்ட் அப் பண்ணப்பட்ட நிலையில் அது ஒரு சாதாரண ரெஸ்டாரெண்ட் செட் அப் என்பதும் ரெகுரலராக வாடகைக்கு விடக்கூடிய இடம் என்பதையும் அக்குகைக்குள்ளே டாய்லெட் படுக்கை வசதிகள் வரை அத்தனையும் இருந்ததை மீடியாக்கள் வளைத்து வளைத்து அம்பலப்படுத்தின.

இது போக இதுவரை உருவாக்கப்பட்ட அத்தனை மீம்ஸ்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக அதிக அளவிலான எண்ணிக்கையிலும் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. அப்படி மீம்ஸ்களை உருவாக்கியவர்களில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகை ட்விங்கிள் கன்னா பதிவிட்டுள்ள ஒரு கிளாமரான ட்விட்டர் பதிவில்,..."கடந்த சில நாட்களாக நிறைய ஆன்மீக போட்டோக்களை பார்த்துவிட்டோம். இப்போது நானும் தியானம் செய்வது எப்படி, போட்டோ எடுப்பது எப்படி, போஸ் கொடுப்பது எப்படி என்பது பற்றி பயிலரங்கு நடத்தப்போகிறேன். எல்லோரும் அதில் கலந்துகொள்ளுங்கள். திருமணத்தில் போட்டோ எடுக்கும் தொழிலுக்கு அடுத்து இதுதான் பெரிய தொழிலாக இருக்கப்போகிறது என நினைக்கிறேன். அதன் பெயர் 'தியான போட்டோகிராபி - போஸ்களும் கோணங்களும்" என்று மோடியை மரண கலாய் கலாய்த்துள்ளார் ட்விங்கிள்.