96 படம் ஏற்படுத்திய மயக்கத்தால் த்ரிஷாவின் சொந்தப்பெயர் த்ரிஷா என்பதை மறக்கடித்து, அவரை ஜானுவாகவே கொண்டாட ஆரம்பித்துவிட்டது வேலவெட்டியத்த தமிழ்சமூகம். அந்த சமூகத்துக்கு பெரும் டென்சனை உண்டாக்கக்கூடிய செய்தியை சற்றுமுன்னர் சாட்சாத் ஜானுவே வெளியிட்டிருகிறார். 

அதாவது சில மணித்துளிகளுக்கு முன்னால் அவரது ட்விட்டர் கணக்கை யாரோ சில விஷமிகள் ஹெக் செய்துவிட்டார்களாம். ‘ஸோ என்னிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எனது ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியாகும் எந்த செய்திகளுக்கும் பதில் அளிக்கவேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஜானு என்கிற த்ரிஷா. 

‘எங்க இருக்க ராம்?’ 

‘உன் ட்விட்டர் அக்கவுண்ட ஹேக் பண்ணுன அதே இடத்துலதான் ஜானு’

அட ராமச்சந்திரா...