Actress Trisha launched Toilet construction project on behalf of UNICEF
அண்மையில் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நடிகை த்ரிஷா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிளீன் இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்திய கிராமப் புறங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது வரையில் திறந்தவெளி கழிவறைகளையே பயன்படுத்தி வருகின்றனா். இதனை முற்றிலுமாக குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது.
பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் தங்களால் முடிந்தளவில் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், இது தொடா்பாக அரசு வழங்கக்கூடிய சலுகைகள் உள்ளிட்ட விவரங்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் குறைந்த செலவில் கழிவறை கட்டுவதற்கான முயற்சிகளை யுனிசெஃப் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்போரூரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற யுனிசெப் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா, தாமே செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஹஇதைத்தொடர்ந்து பேசிய நடிகை த்ரிஷா, சுத்தாக இருக்க வேண்டம் என்தே தமது லட்சியம் என்றும், நாம் மட்டுமல்லாமல் அனைவருமே சுத்தமாக இருக்கவும், நமது சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் த்ரிஷா கேட்டுக் கொண்டார்.
