கிரிக்கெட்டுக்கும் நடிகைகளுக்கும் அப்படியென்னவோ காலகாலமாக தீராத பந்தம் ஒன்று இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக லண்டனில் நாளை நடைபெற மிக முக்கியமான மேட்சான இந்தியா-இங்கிலாந்து மேட்சை நேரில் கண்டு களிப்பதற்காக நடிகை த்ரிஷா தலைமையில் நாலைந்து நடிகைகள் லண்டனில் முகாமிட்டிருக்கிறார்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தொடரில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிகளைக் குவித்து வருகிறது.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டதால் அதில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே  அரையிறுதிக்கு செல்லும். இந்தியா அடுத்ததாக நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானது. இதில் தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து இழக்கும். 

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாக பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார்,...நாங்கள் இங்கே பர்மிங்ஹாமில் இருக்கிறோம். ஒரே குதியாட்டம்தான்’என்று பதிவிட்டிருக்கிறார். டிக்கட் நீங்க போட்டீங்களா இல்லைன்னா யார் அந்த கிரிக்கெட் வீரர்னு கண்டுபிடிக்கணுமா பொண்ணுகளே?