தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுக்குறித்து அவர் தனது பதிவில், இதுகுறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதற்காக நான் நன்றி கூறுகிறேன். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி”என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் வடிவேலு, நடிகை மீனா, நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட திரையுலகில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக பதிவாகிறது. இதனால் தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 6,983 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,998 அதிகரித்து 8,981 ஆக பதிவாகியுள்ளது. 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 3,759 ஆக இருந்த நிலையில் 772 அதிகரித்து 4,531 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 8,944 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் என 8,981 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.