actress topsee pannu latest news

வெள்ளாவி

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாகிவிட்டார் டாப்சி.தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்தார்.அதில் வரும் வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாய்ங்களா பாடல் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் குடி கொண்டவர்.அதன் பிறகு ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. 

பிங்க்

இதனால் கோலிவுட்டிலிருந்து மீண்டும் டோலிவுட்டிற்கு தாவினார்.அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்து பின் பாலிவுட்டிற்கு சென்றார்.
பிங்க் படத்தின் மூலம் பாலிவுட்டில் பேசப்படும் நடிகையாக உருவானார்.இயக்குனர்களே இவரை தேடி வரும் அளவிற்கு நல்ல நடிகையாகி விட்டார் டாப்சி.

இந்த நிலையில் சக நடிகர்கள் பற்றி அவர் கூறியதாவது.

பழகு

படப்பிடிப்புக்கு சென்றாலே சக நடிகர்களுடன் பேசி பழகுவதுதான் முக்கியம்.அவர்களுடன் நன்றாக பேசி பழகினால்தான் என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.

வெட்கம்

சக நடிகர்களுடன் பேசி பழகும் விஷயத்தில் நான் வெட்கப்பட மாட்டேன்.சக கலைஞர்களுடன் பேசி பழகினால் தான் திரையில் நடிக்கும் போது சௌகரியமாக இருக்கும். 

தவறு

நான் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை.ஒரு படத்தின் முடிவை வைத்தே அடுத்த படத்தை முடிவு செய்கிறேன்.

கவர்ச்சி

நான் வித்தியாசமான தனித்துவமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.கவர்ச்சியாக நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிறார் டாப்சி.