நடிகை டாப்சி தமிழில் அறிமுகமான 'ஆடுகளம்'  தேசிய விருதைப் பெற்றப்படம். இந்த படத்தை தொடர்ந்து  பல படங்களில் பிசியாக நடிக்கத் துவங்கினார். இவருக்கு தமிழில் எந்த அளவிற்க்கு வரவேற்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு தெலுங்கு திரையுலகிலும் பிஸியாக நடித்தார்.

பாலிவுட்டில் டாப்சி:

டாப்சி தற்போது முழு நேர பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான சில படங்கள் வெற்றிப்பெறா விட்டாலும்,  இவர் நடிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வெளிவந்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து பல படங்களில் நடிக்கத்துவங்கினார்.

சந்தித்த அவமானம்:

இன்று இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகையாக இருக்கும் இவர் ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு தேடும்போது...  தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எல்லாம் ‘நீயெல்லாம் நடிக்க வந்துட்ட, உனக்கு ஹீரோயின் பேஸ் இல்லை. கிளாமர்  இல்லை என்று கூறி அவமானப்படுதினார்களாம். ஆனால் இவர் தான் அவமானம் பட்ட அவமானங்களை படிக்கல்லாக மாற்றி முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.