பிரபல நடிகை டாப்ஸி, இளம் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை,  திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறந்த நடிகை என்கிற பெயரை எடுத்த உடன், பாலிவுட் திரையுலகில் தற்போது முழு கவனத்தையும் செலுத்தி வருபவர், நடிகை டாப்ஸி.

பாலிவுட் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ள இவர், ஆரம்பத்தில் கதை தேர்வுகளில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், தற்போது கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்,  அவரிடம் தற்போதைய நடிகர்களில் யாரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான, விக்கி  கௌஷல் பெயரை கூறி ஷாக் ஆக்கியுள்ளார் டாப்ஸி .