பாலிவுட் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை தேஜஸ்ஸ்ரீ,  தமிழில் 'ஒற்றன்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் அர்ஜூனுடன், 'சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா... " என பாடலுக்கு நடனமாடி பல ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து,  நடிகர் விஜய் நடித்த  'மதுர' , 'தகதிமிதா',  'நீயே நிஜம்', '23 ஆம் புலிகேசி' போன்ற பல படங்களில் இரண்டாவது ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் 'பரஞ்சோதி' என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக இவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை. 

 இந்த நிலையில் இவர் மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  

இந்த வீடியோவில்,  என்னை நீங்க பல படங்களில் பார்த்திருப்பீர்கள்...  கடைசியாக 'பரஞ்சோதி' படத்தில் நடித்தேன்.  அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.  காரணம், என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  அவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது.  இப்போது அவர் இல்லை நான் மீண்டும் நடிக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன்.  பெரிய கேரக்டர் வேண்டாம்.  சின்ன கேரக்டராக இருந்தாலும் நல்ல கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன். மேலும்  வெப் சீரியசாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.  நான் நடித்தே ஆக வேண்டும் தயவு செய்து தனக்கு உதவுமாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.  மும்பையைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.