Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் நடிக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா திரையுலகில் காலடி எடுத்து வைத்து, கிட்ட தட்ட 15 வருடங்கள் ஆகும் நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படங்கள் நடிப்பதை விட, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
 

actress thamannaah  commit the anthathun movie remake
Author
Chennai, First Published Sep 19, 2020, 4:08 PM IST

நடிகை தமன்னா திரையுலகில் காலடி எடுத்து வைத்து, கிட்ட தட்ட 15 வருடங்கள் ஆகும் நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படங்கள் நடிப்பதை விட, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக  ’ஆக்சன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. இதில் தமன்னா சண்டை காட்சியில் அசால்ட் செய்திருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

actress thamannaah  commit the anthathun movie remake

இந்நிலையில், பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்தாதூன்'  படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க, நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள அதகவலில் தபு வேடத்தில் தமன்னாவும், ஆயுஷ்மான் வேடத்தில் நிதினும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷ் ஆகியோர்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

actress thamannaah  commit the anthathun movie remake

மேலும் இந்த படத்தை மெர்லபகா காந்தி இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios