பிரபல நடிகையை காதலித்து, பின் அவரை மோசமான வார்த்தைகளால் பேசி, நண்பர்கள் முன்பு அவரை, காதலர் அடித்து விரட்டிய சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக, சீரியலில் நடிக்க துவங்கியவர் பிரபல நடிகை டினா தத்தா. இதுவரை 20 க்கும் அதிகமான சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து பாலிவுட் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர்.

 

அதிகமாக பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிக்கும் இவர் சினிமா துறையை, சாராத ஒருவரை ஐந்து வருடங்களாக காதலித்து வந்தார். 

இந்நிலையில் தற்போது அவருடைய காதல் முறிவுக்கு பின்,  முதல் முறையாக தன்னுடைய காதல் முறிவிற்கான காரணம் குறித்தும், காதலர் மூலம் தனக்கு நடந்த கொடுமையை பற்றியும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில்...  "ஐந்து வருடமாக உண்மையாக ஒருவரை காதலித்து வந்தேன். நண்பர்கள் மூலம் தான் இருவரும் சந்தித்தோம் முதலில் நட்பாக தொடங்கிய எங்களுடைய பந்தம், பின்பு காதலாக மாறியது. காதலித்த பின்பு தான் அவருடைய சுயரூபம் தெரிய வந்தது.  தன்னை மிகவும் மோசமாக நடத்த துவங்கினார்.  நான் செய்யும் வேலைகள் பற்றி கேவலமாக பேசுவார். ஒரு முறை என்னை நண்பர்கள் முன்னிலையில் அடித்து உதைத்து அங்கிருந்து விரட்டினார்.  பல கொடுமைகளை தாங்கிய என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அதனால் அவரை பிரேக் அப் செய்து விட்டேன்.  இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என நினைத்தேன் ஆனால் தற்போது முதல்முறையாக தனக்கு நடந்த கொடுமை பற்றி வெளியில் கூறுவதாக கூறியுள்ளார்". ஒரு நடிகைக்கு இப்படி நடந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.