நடிகர் ஜெயம் ரவி தற்போது தன்னுடைய 24 ஆவது  படமாக கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 

நடிகர் ஜெயம் ரவி தற்போது தன்னுடைய 24 ஆவது படமாக கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை நடித்து முடித்த பின், 25வது படமாக இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீவா த்ரிஷாவை வைத்து 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கியவர்.

சமீபத்தில் மும்பை சென்ற அகமத் நடிகை டாப்ஸியை சந்தித்து தன்னுடைய படத்தின் கதையை கூறி அவரிடம் ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு 'வை ராஜா வை' என்கிற தமிழ் படத்தில் நடித்தார். பின் தெலுங்கு மற்றும் இந்தியில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இதைதொடந்து நான்கு வருடங்களுக்கு பின் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்தில், மற்றொரு நாயகி தேர்வு செய்த பின்னரே இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.