தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் உருக்கமாக பதிவிட்டிருந்த தமன்னா, என் பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்தோம். என் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறி இருந்தார். தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை” எனக்கூறியிருந்தார். 

இதையடுத்து வெப் சீரிஸ் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் சோசியல் மீடியாவில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை கூறிய தமன்னா, தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தானும் தனது டீமும் பாதுகாப்பாக இருந்தும் கொரோனா பாதித்துவிட்டது, மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்தேன். குணமானதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன். இப்போது நன்றாக உணர்கிறேன் என கூறியிருந்தார். 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு ஐதராபாத்தில் இருந்து வீட்டிற்கு வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்கும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.