Tamannaah Bhatia : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை படத்தின் 4ம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் அரண்மனை 4. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் நடிகை தமன்னா இந்த திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து மனம் திறந்துள்ளார். மிகவும் சவாலான பல ஸ்டண்ட் காட்சிகளில் இந்த படத்தில் தான் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 

இருப்பினும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது என்றும், விரைவில் அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் காண தான் ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் படபிடிப்பின் போது (BTS - Behind The Scenes) அவர் ஈடுபட்ட சில ஸ்டண்ட் காட்சிகளையும், படபிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பற்றிய சில புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Samuthirakani : சாதி பார்க்கும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - பல விஷயங்களை ஓப்பனாக பேசிய சமுத்திரக்கனி!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை திரைப்படத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி-யின் அரண்மனை 4 மற்றும் ஹரியின் ரத்னம் ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு திரைப்படங்களும் தற்பொழுது தனித்தனியே வெளியாக உள்ளது.

Scroll to load tweet…

தொடர்ச்சியாக ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா இறுதியாக கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரன் ஏற்று நடித்திருந்தார். அதே நேரத்தில் அவர் தோன்றிய காவாலா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Minmini : நீ இங்க மட்டும் பாடுனா போதும்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடகிக்கு வாய்ப்பளிக்க மறுத்த இளையராஜா