முன்னணி நடிகைகள், பெரிய ஹீரோக்கள் படத்தில் நடிப்பதை விட, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே, பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, எடுக்கப்படும் படங்களில் நடிக்க நடிகர் - நடிகை என்ன இருவருமே போட்டி போடுகிறார்கள்.  

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி, மற்றும் தற்போது ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்து வரும் நிலையில்,  நடிகை டாப்ஸியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.  

பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டான், மிதாலி ராஜ் வாழ்க்கை பற்றி உருவாக உள்ள 'சபாஷ் மித்து' என்னும் வரலாற்று படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் டாப்ஸி. இந்த தகவலை அவரது பிறந்த நாளான இன்று,  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். 

இந்த படத்தை ஷாருக்கான் நடித்த 'ரேஸ்' படத்தை இயக்கிய, ராகுல் டோலக்கிய இயக்கவுள்ளார். நடிகை டாப்ஸி, பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து கதைக்கும், கதாபாத்திரத்துக்கும், முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து வரும் நிலையில், தற்போது அடுத்ததாக மிதாலிராஜ் ஆக மாற உள்ளார்.

சமீபத்தில் நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் இந்தியில் நடித்த கேம் ஓவர் திரைப்படம் வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.