பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் கடந்த 1997 ஆம் ஆண்டு, நடிகர் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் நடித்து பிரபலமானவர்.   

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தார். மேலும் , 'Renee ' மற்றும் 'alisha sen ' என இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.   

இந்நிலையில் இருக்கு 44 வயதில் திருமண ஆசை வந்துள்ளது. சுஷ்மிதா தற்போது Rohman Shawal என்ற மாடல் ஒருவரை காதலித்து அவருடன் அடிக்கடி டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிகை சுஷ்மிதாவை விட 14 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய  திருமணம், வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில் , இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.