actress sunaina turn to web serieas

தமிழில் நடிகர் நகுல்லுக்கு ஜோடியாக 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமான சுனைனா... இந்த படத்தை தொடர்ந்து அருள்நிதிக்கு ஜோடியாக வம்சம், மாசிலாமணி உள்ளிட்ட பல பாங்களில் நடித்தார். 

மேலும் விஜயுடன் தெறி படத்திலும் நடித்தார். விரைவில் இவருடைய நடிப்பில் விஜய் ஆண்டனியுடன் இவர் நடித்துள்ள 'காளி' திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தவிர தனுஷை வைத்து கெளதம் மேனன் இயக்கி வரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

சினிமாவை தாண்டி தற்போது வெப் சீரீஸ்சிலும் தன்னுடைய பயணத்தை துவங்கி உள்ளார் சுனைனா. 'திரு திரு துரு துர' படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.எஸ்.நந்தினி ஒரு வெப் சீரீஸ் இயக்க வருகிறார். இதில் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறாராம் சுனைனா.

சத்தமில்லை இந்த பாபிடிப்பு நடைபெற்று வருவதாகவும். இந்த சீரியலில் தான் நடிப்பது தற்போது யாருக்கும் தெரிய வேண்டாம் என கேட்டுக்கொண்டாராம் சுனைனா.