நடன குழுக்களில் டான்சராக அறிமுகம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடனம், குணச்சித்திர வேடம் என வெள்ளித்திரையில் தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டவர் சுஜா வருணி.

படிக்கும் போதே குடும்ப சூழ்நிலை காரணமாக திரைத்துறையில் பணியாற்றினார். தற்போது அம்மா மற்றும் தங்கையோடு வசித்து வரும் இவர் பல காதல் தோல்விகளை சந்தித்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சுஜா, இதுவரை நான் என் வாழ்க்கையில் ஒரு வெற்றியை கூட சந்தித்தது இல்லை என்றும் சந்தித்தது எல்லாம் துன்பங்களும், பிரச்சனைகளும் மட்டும் தான். இந்த நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் பலபேருடன் சேர்ந்து வாழ போகிறேன். அதற்காக தற்போது நான் தயாராக இருக்கிறேன் என கூறினார். 

மேலும் இதுவரை ஒரு சாதாரண பெண்ணாக வெளியில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததற்கும் , உள்ளே ஒரு போட்டியாளராக நுழைவதற்கும் நிறைய மாற்றத்தை உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.