actress suganya daugther photo leeked
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து 'சின்ன கவுண்டர்', 'திருமதி பழனிசாமி', 'இளவரன்', 'இந்தியன்' உள்பட 50திற்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் சுகன்யா.
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு, ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவர், ஒரே வருடதில் இவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்தார். 
விவாகரத்தை தொடர்ந்து இவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும் ஒரு சில சீரியலிலும் நடித்து வந்தார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். ஆனால் இதுவரை தன்னுடைய மகளை சுகன்யா வெளியே காட்டியதே இல்லை, தற்போது இவருடைய மகளின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
