தென்னிந்திய திரையுலகம் அடுத்தடுத்து பல இழப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், பிரபல நடிகையின் தந்தையும், நடிகருமான கே.டி.சந்திரன், உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

86 வயதாகும் நடிகர் கே.டி.சந்திரன், மயூரி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சுதா சந்திரனின் தந்தையாவார். தமிழில் 'சர்வம் சக்திமயம்', 'நம்பினார் கெடுவதில்லை' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதே போல், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியையும் நேர்த்தியாக தொகுதி வழங்கியவர். எனவே லட்சுமி ராமகிருஷ்ணனை போல் இவருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். 

நடிப்பை தவிர்த்து சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர், பல பாலிவுட் திரை படங்கள், சீரியல் போன்ற வற்றிலும் நடித்துள்ளார். இவரது தந்தை கே.டி.சந்திரனும் பல படங்களில் நடித்து, பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சுதா சந்திரனின் தந்தை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் மே 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது பலனின்றி இன்று காலை 10 மணிக்கு காலமானார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் நடிகை சுதா சந்திரன் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.