தன்னுடைய காதல் தோல்வி  குறித்து மனம்திறந்து பேசிய நடிகை சுருதிஹாசன் தான் ஒரு நல்ல காதலுக்கு ஏங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

’தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி  பாயும்’ என்பதை நிரூபிக்கும் வகையில் கமலுக்கு அடுத்த சினாமா வாரிசாக திரையில் உச்சத்தை தொட்டு வருகிறார் அவரது மகள் சுருதிஹாசன். தன்னுடைய இசை,  நடிப்பு, நடனம் என பல ஆயிரம்  இளைஞர்களின் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்திருக்கிறார் சுருதிஹாசன்.  சில மாதங்களுக்கு முன்பு  சுருதிக்கு காதல் முறிவு ஏற்பட்டு அந்த சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில்,  இனி தான் யாரையும் காதலிக்கப்போவதில்லை, திருமணமும் செய்து கொள்ளவும் போவதில்லை,  இனி தனி வாழ்க்கை தான் கூறி அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிரவைத்தார்.

அவரின் பேச்சு அந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் தெலுங்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுருதிஹாசன் காதலைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அதில்  சில நேரங்களில் சில மனிதர்கள்  தன்மையானவர்களாகவும், சில நேரங்களில் மிக மோசமானவர்களாகவும் நடந்துகொள்கின்றனர் என்ன தன் பழைய காதல் அனுபவத்தை பிகிர்ந்து கொண்டார். தான் ஒரு நல்ல காதலுக்காக ஏங்குவதாகவும் அதற்காக தான் காத்திருப்பதாகவும் அவர் மனம் திறந்து பேசினார். அவரின் இந்த பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த சுருதிஹாசன் தற்போது காதலுக்காக ஏயங்குவதாக கூறியிருப்பது, அவர் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும் வகையில்  ஏதோ நடந்திருக்கிறது என அவரது ரசிகர்கள் பேசிவருகிறார்கள்.