Actress Sridevi son rushed to Mumbai to hold the funeral
நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்புக் காரணமாக உயிர் இழந்தார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மது போதையால் நிலைக்குலைந்து குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்ததாக தடவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
54 வயதிலும் இளமையான தோற்றத்துடன் வளம் வந்து தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விட்டு வந்த இவரது மறைவு பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 
பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீ தேவியின் உடல், அணில் அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து வர தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூரின் மகன் அர்ஜுன் கபூர் தன்னுடைய மாற்றான் தாயின் இருதிச்சடங்கின் ஏற்பாடுகளை செய்வதற்காக மும்பை விரைந்துள்ளார்.

தன்னுடைய தந்தையை இரண்டாவதாக ஸ்ரீ தேவியை திருமணம் செய்துக்கொண்டதால் அர்ஜுன் கபூருக்கும், ஸ்ரீ தேவிக்கும் சுமூகமான உறவு இல்லை என்று கூறப்பட்டாலும் சமீபத்தில் அர்ஜுன் கபூர் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
தற்போது ஸ்ரீ தேவிக்கு இரு மகள்கள் என்பதால் மகனாக முன்னின்று இறுதி சடங்கின் அனைத்து ஏற்பாடுகளையும் அர்ஜுன் கபூர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
