தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, பாடகி, குணசித்திர வேடம் என தன்னுடைய நடிப்பை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துச் சென்றவர் நடிகை ஸ்ரீ வித்யா. தற்போது இவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று வருமானவரித் துறைமூலம் ஏல முறையில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கை:

தென்னிந்திய திரையுலகில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த பாடகி. கேரளாவை சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  நான்கு ஆண்டுகள் மட்டுமே இணைத்து வாழ்த்த இவர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக 1980 யில் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று பிரிந்தார்.

திரைத்துறை:

சிவாஜி, கமல், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாகவும் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ள இவர் கிட்டதட்ட 35 வருடங்களாக திரைத்துறையில் உச்சம் தொட்ட நடிகையாக வளம்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மனையில் ஸ்ரீ வித்யா:

பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இவர் முதுகெலும்பு புற்றுநோய் காரணமாக பிரபல மருத்துவ மனையில் காலமானார். இவரின் இறுதிக்காலத்தில் இவருக்கு தேவையான அனைத்தையும் செய்து இவரை பார்த்துக்கொண்டவர் கணேஷ்குமார் என்பவர்தான்.

நடிகரும் பிரபல அரசியல் வாரிசுமான கணேஷ் குமார், தற்போது பத்தனாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாக உள்ளார்.

ஏலத்திற்கு வரும் சொத்து:

இந்நிலையில் நடிகை ஸ்ரீ வித்யாவிற்க்கு சொந்தமாக சென்னை அபிராமபுரம் சுப்ரமணியபுரம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் மூலம் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1250 சதுர அடி கொண்ட இந்த பிளாட்டின் மதிப்பு ரூ. 1 கோடியே 14லட்சத்து 10ஆயிரம் என்று குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ஸ்ரீ வித்யா கட்ட வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி மற்றும் ஏலச்செலவு தொகையை வசூல் செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருமானவரித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.