சினிமாவை விட்டு ஓரளவு ஒதுங்கி, பேரளவில் அரசியலும் செய்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பேச மிக விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பதிவில் மிரட்டியுள்ளார்.

திமுகவின் இளைஞரணித் தலைவர் பதவி கிட்டியவுடன் சினிமாவிலிருந்து பெருமளவில் ஒதுங்கிய உதயநிதி ஸ்டாலின் தற்போது கவனம் செலுத்தி வரும் ஒரே படம் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா கூட்டணியுடன் மிஷ்கின் இயக்கியிருக்கும் ‘சைக்கோ’மட்டுமே. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை ஆண்ட்ரியா, உதயநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், ஆனால் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி, அவரை யூகிக்கும் வகையில் ஒரு அவதூறுச் செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார். அவருக்குப் பின்னால் பிஜேபி இருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத் தற்போது களம் இறங்கியிருக்கும் பரபரப்பு நடிகை ஸ்ரீரெட்டி, உதயநிதி ஸ்டாலின் ‘கதிர்வேலனின் காதல்’காலத்து  ஹைதராபாத் ராத்திரி நேரத்து  சம்பவம் ஒன்றை நினைவூட்டி,...அப்ப சொல்லிட்டு இப்ப வரைக்கும் ஒரு படத்துல கூட சான்ஸ் தராம இருக்கீங்க. இது நல்லா இல்லையே பாஸ்’என்கிற தொனியில்,... விரைவில் நான் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியே ஆகவேண்டும். அதற்கான பிரஸ் மீட் நடக்கவிருக்கிறது ...ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்’என்று பகீர் கிளப்பியிருக்கிறார். அந்த ஹைதராபாத் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் விஷால் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் கொஞ்ச நாட்களாகவே‘முரசொலி’ நிலத்துக்கு பட்டா, மூலப்பத்திரம் கேக்குற பிஜேபி பார்ட்டிகளோட இன்னொரு ரூட்டா பாஸ் இது?