தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியின் விஷயம் தான்... தென்னிந்திய சினிமாவின் ஹாட் டாப்பிக். பல தெலுங்கு பிரபலங்கள் இவரை கண்டு பயப்பிடும் அளவிற்கு இவர் சர்ச்சையான தகவல்களையும், அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை கூட வெளியிடுவேன் எனக் கூறி, அலற விட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

மேலும் இவருடைய பெயரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு பிலிம் சேம்பர் முன், தன்னுடைய ஆடைகளை கழட்டி விட்டு, அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தினார். 

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரின் மகன் தன்னை சீரழித்து விட்டதாக கூறி அதற்கான ஆதாரமாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவர் வேறு யாரும் இல்லை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் அபிராம் டகுபதி தான். இவர் நடிகர் ராணா டகுபதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதைதொடர்ந்து பேசிய ஸ்ரீரெட்டி தொடர்ந்து இது போல் பல அதிரவைக்கும் உண்மைகளை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தெலுங்கு திரையுலகையே இந்த நான்கு குடும்பங்கள் ஆட்சி செய்து வருவதாகவும் காரணம் இவர்களுடைய குடும்ப வாரிசுகளை தவிர வேறு யாரும் வளர்ந்தால் அவர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி நாசமாக்கி விடுவார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல் தெலுங்கு திரையுலகில் அவ்வபோது நடந்து வரும் தற்கொலைகளுக்கு இந்த நான்கு குடுபங்கள் தான் காரணம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னை சமாதானப்படுத்த கோடிகணக்கில் பணம் கொடுக்க முன் வந்ததாகவும். இதற்கு தான் உடன்பட வில்லை என்றும் விரைவில் பல உண்மைகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.