ஹோட்டல் அறை... அந்தரங்கம்... நிர்வாண போராட்டம்... லீலைகளை அம்பலப்படுத்த வரும் ஸ்ரீரெட்டி..!

தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, படவாய்ப்புகள் தேடிய போது... இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி இவரை பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் நடிகர்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு, வாய்ப்புகள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக  குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ஸ்ரீரெட்டி.

actress sri reddy bio graphy movie 'reddy story'

தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, படவாய்ப்புகள் தேடிய போது... இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி இவரை பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் நடிகர்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு, வாய்ப்புகள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக  குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ஸ்ரீரெட்டி.actress sri reddy bio graphy movie 'reddy story'

ஆரம்பத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பற்றிய அந்தரங்க தகவல்களை வெளியிட துவங்கிய இவரை, தெலுங்கு பிரபலங்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

ஒரு நிலையில் இவரை பிரபலங்கள் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் மீண்டும் தன்னை நடிகர் சங்க உறுப்பினராக சேர்க்ககோரி தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பு நிர்வாண போராட்டதை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.

actress sri reddy bio graphy movie 'reddy story'

தெலுங்கு திரையுலகில் போராடி தோற்ற இவர்... அடுத்ததாக தன்னுடைய கவனத்தை  தமிழ் சினிமாவின் பக்கம் திருப்பினர். தமிழ் லீக் என்ற பெயரில் முதல் முதலாக கோலிவுட் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுடன்... கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த அந்த விஷயம் நினைவு இருக்கிறதா என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரை தொடர்ந்து இவருடைய லிஸ்டில் சிக்கியவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது ஸ்ரீகாந்த் லைம் லைட்டில் இல்லை என்றாலும் சிறந்த நடிகராக அனைவராலும் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இவர் வெளியிட்ட தகவல், இவருடைய இமேஜ்சை ரொம்ப டாமேஜ் ஆக்கியது. அதே போல் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் சுந்தர்.சி, போன்ற பலர் தன்னை பயன்படுத்தி கொண்டதாக கூறினார்.

actress sri reddy bio graphy movie 'reddy story'

இதுவரை இவருடைய குற்றச்சாட்டுக்கு மற்ற நடிகர்கள் பதிலடி கொடுக்கவில்லை என்றாலும், லாரன்ஸ் மட்டும்... உண்மையில் அவருக்கு திறமை இருந்தால் பட வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். மேலும் ஸ்ரீரெட்டி, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுவதில் தீவிரமாக இறங்கியதாக கூறப்பட்டது.actress sri reddy bio graphy movie 'reddy story'

தற்போது இதனை உறுதி படுத்தும் வகையில் "தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன் மற்றும் ரங்கீலா என்டர்பிரைசஸ் இணைந்து தயாரிக்க உள்ள "ரெட்டி டைரி' என்கிற வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் நாயகன் நாயகிகள் புதுமுகங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

actress sri reddy bio graphy movie 'reddy story'

இந்த படத்தில், ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில்... முக்கிய திருப்பங்கள், வாழ்க்கையில் நடந்த சோகம், ஹோட்டல் அரை ஏமாற்றங்கள், நிர்வாண போராட்டம், மற்றும் அந்தரங்க விஷயங்கள் அனைத்தும் இந்த படத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. 

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios