மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் 'தடக்' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள நிலையில்,  தற்போது ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

இவரை பிரபல இயக்குனர் கரண் ஜோகர் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களுமே... தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மூத்த மகள் ஜான்வி பாலிவுட் திரையுலகில் ஒரு நடிகையாக நிலையான இடத்தை பிடித்து விட்டார்.  தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கதையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து ஜான்வியின் தங்கை குஷி கபூரும் தற்போது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  அவரை ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகம் செய்த கரண் ஜோகர் அறிமுகப்படுத்தவுள்ளார். 

நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி பயின்று வரும் குஷி,  படிப்பு முடித்தவுடன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் அவருடைய இடத்தை இதுவரை யாரும் நிரப்பத நிலையில், அவருடைய இரண்டு மகள்களில்  ஒருவராவது ஸ்ரீதேவியின் இடத்தை பிடிப்பாரா? என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.