பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் மிகவும் பிசியானவர். பாலிவுட் படங்கள்,  பேஷன் ஷோக்கள் என எப்போதும் வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டே இருப்பார். சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் சோனம் கபூர் தனக்கு நேரும் அத்தனை சம்பவங்களையும் டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட பிரிட்டீஸ் ஏர்வேஸ் நிறுவனம் தனது லக்கேஜ்ஜை கையாண்டது குறித்து 2வது முறையாக டுவிட்டரில் கிழி,கிழியென கிழித்திருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற சோனம் கபூர் கால் டாக்ஸியில் செல்லும் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கால் டாக்ஸி சேவையில் சிறந்து விளக்கும் ஊபர் டாக்சியில் பயணம் செய்துள்ளார், அப்போது டிரைவருடன் என்ன பிரச்சனை என்பதை முழுமையாக குறிப்பிடாத சோனம் கபூர். 

நான் ஊபர் டாக்சியில் பயணித்த போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது, ப்ளீஸ், ப்ளீஸ் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்தவரை அனைவரும் பொது போக்குவரத்தை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள், அது தான் மிகவும் பாதுகாப்பானது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். 

அந்த பயணத்தில் நடந்தவற்றை வெளிப்படையாக கூறாமல், சோனம் கபூர் பதிவிட்டுள்ள இந்த ட்வீட், சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். லண்டன் வாசிகள் சிலரோ அங்கு எப்படி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என சோனம் கபூருக்கு டிப்ஸ் கொடுத்து வருகின்றனர்.