actress sona mother pass away
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளவர் நடிகை சோனா. மேலும் தமிழில் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் இவருடைய தாயார் நேற்று நள்ளிரவு 12 :40 மணி அளவில் உயிர் இழந்து விட்டதாக அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மா மிகவும் தைரியமான பெண்மணி என்றும் அவரை இழந்தது தனக்கு ஒரு மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனால் சோனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். சோனாவில் தாயார் இறந்த செய்தியை அறிந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

