சூர்யா - ஜோதிகாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் ரசிக்கப்படும் காதல் தம்பதி சினேகா - பிரசன்னா. 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.

2015ம் ஆண்டு இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சினேகாவிற்கு வேலைக்காரன் படம் மூலம் ரசிகர்கள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர். தற்போது தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்த பட்டாஸ் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியான. 

ஆனால் அடிவயிற்றில் சிசுவை சுமந்தபடி அடிமுறை பயின்று அசத்தியிருந்தார் சினேகா. இந்நிலையில் சினேகா - பிரசன்னா தம்பதிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு முன்னதாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சினேகா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

பச்சை நிற உடையில் தலையில் மலர் கீரிடத்துடன், கர்ப்பிணி தேவையாக காட்சியளிக்கும் சினேகாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்துடன், கடந்த வாரம் எங்களுடைய தேவதை எங்களுடைய அழகான வாழ்க்கைக்குள் வந்து, அதை மேலும் அழகாக்கியுள்ளால். எங்கள் மீது அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி. விரைவில் மற்ற போட்டோக்கள் பதிவிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.