திருமணத்திற்க்கு பின், தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாப்பாத்திரம் கிடைக்காமல், இருந்த சினேகா, தற்போது ஐந்து மொழிகளில் உருவாகி வரும் 'குருக்ஷேத்ரா' படத்தில் பஞ்சாலியாக நடிக்கிறார் .  

வரலாற்று சிறப்பு மிக்க, இதிகாசங்களில் ஒன்று 'மகாபாரதம்', பஞ்ச பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம், பகைமை போன்றவற்றை விவரிக்கும் அடிப்படியில் தற்போது மிக பிரமாண்டமாக,  உருவாகி வரும் திரைப்படம் 'குருசேத்திரம்'.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், மிக முக்கிய கதாபாத்திரமான திரவுபதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சினேகா நடிக்கிறார். கர்ணனாக நடிகர் அர்ஜுனும், துரியோதனனாக தர்ஷன், அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவி ஷங்கர், ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை நாகன்னா இயக்கி வருகிறார். முனி ரத்னா தயாரித்து வருகினார். 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் , இம்மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தமிழ் பாதிப்பை, பிரபல தயாரிப்பாளர் தாணு வெளியிட உள்ளார்.