'மேகா', 'டார்லிங்', 'அச்சமின்றி' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே.  

இவர் தற்போது 'பரியேறும் பெருமாள்' படத்தின் நாயகன் கதிர், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'சத்ரு' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அம்பரீஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அம்ரீஷ், இந்த படத்திற்கு தன்னை இசையமைப்பாளராக கமிட் செய்த போது...  4 பாடல்கள் உள்ளதாக படக்குழுவினர் கூறினார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் படத்தில் ஒரு பாடல் கூட இல்லை, எனக்கு வேலையே இல்லை என்று கூறினார்.

பின் சும்மா இல்லாமல், என்னைப் போல் படத்தில் நடிகை சிருஷ்டிக்கும் வேலையே இல்லை என்று அவரை அசிங்க படுத்துவது போல் அனைவர் மத்தியிலும் கூறினார்.

உடனே சும்மா இருப்பாரா சிருஷ்டி, வரிந்து கட்டி பொது மேடையிலேயே மைக்கை பிடிங்கி சண்டை போட துவங்கி விட்டார். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதில் இருந்து இந்த படம் முழுக்க முழுக்க ஹீரோவுக்கான படம் என தெறியவந்துள்ளது.