இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில், லட்ச கணக்கில் லோன் பெற்று அதனைத் திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்க்கு தம்பி செல்பவர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. 5 லட்சத்துக்கும் குறைவாக லோன் பெரும் சாதாரண மக்களிடம் 1000 முறை கையெழுத்து பல்வேறு டாக்குமென்ட்ஸ் கேட்கும் வங்கிகள் ஏமாறுவதே செல்வந்தர்களிடம் தான். 

இந்நிலையில் இதே போல் பிரபல நடிகை வங்கி ஒன்றில் 36 லட்சம் மோசடி செய்துவிட்டு லண்டன் சென்று செட்டில் ஆகியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வங்கியை சேர்ந்தவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

நடிகை சிந்துமேனன்:

கடல்பூக்கள், சமுத்திரம், யூத், ஈரம் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் சிந்துமேனன். தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

வங்கி மோசடி:

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் வங்கி ஒன்றில் சகோரதரருக்கு 36 லட்சம் லோன் வாங்க தனது சொத்தை கியாரண்டியாக கொடுத்துள்ளார். ஆனால் இவர் கொடுத்துள்ள ஆவணங்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சிந்துமேனனின் சகோதரரையும் அவருடன் வசித்து வந்த இன்னொரு பெண்ணையும் போலிசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காக, திருமணம் ஆகி லண்டனில் செட்டில் ஆன சிந்துமேனன்னை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை செய்வது குறித்து வங்கி அதிகாரிகள் போலீசாருடன் ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.