ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் கடந்து தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக். சாமானியர்களை கடந்து பாலிவுட், டோலிவுட், கோலிவுட் திரைப்பிரபலங்களும் டிக்-டாக்கில் இணைந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் பலரும் பொழுது போக்க வழியில்லாததால் டிக்-டாக்கில் இணைந்து டைம் பாஸ் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத... ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது.இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தலைவர் செம்ம ஸ்டைலிஷாக நடித்திருந்த, 'பேட்ட' படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

நடிப்பில் மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தன்னை ரசிகர்களுக்கு நினைவூட்ட துவங்கியுள்ளார் சிம்ரன். சில மாதங்களுக்கு முன்பு தான் டிக்-டாக்கில் இணைந்தார். அசத்தல் நடன அசைவுகளுடன் சிம்ரன் பகிரும் சூப்பர் டான்ஸ் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகின்றன. மாஸ்டர் படத்தின்  “வாத்தி கம்மிங்” படத்திற்கு அடுத்ததாக தற்போது டிக்-டாக்கில் அதிக வைரலாகி வரும் பாடல் “புட்ட பொம்மா”. 

இதையும் படிங்க: நயன்தாரா அம்மாவை பங்கம் செய்த நெட்டிசன்... மாமியாருக்கு சப்போர்ட்டாக மருமகன் விக்கி போட்ட கமெண்ட்...!

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 'அல வைகுந்தபுரம்லு'. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து சிம்ரன் போட்டிருக்கும் ஆட்டம் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. சிம்ரன் போட்ட ஆட்டம் இதோ....