actress simran lovers list
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன், பல நடிகைகளுக்கு டப் போட்டி கொடுத்தவர். இடுப்பழகி என்ற பெயரோடு நிலையான இடத்தை பிடித்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், கமல், விஜயகாந்த், என பலருக்கு ஜோடியாக நடித்தவர்.
ஒரு நடிகை மிகவும் பிரபலமாகினால் அவரை பற்றிய கிசு கிசுக்களும் அதிகமாகத்தே இருக்கும். அப்படி நடிகை சிம்ரனும் பல பிரபலங்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கி, பின் அவருடைய குடும்ப நண்பர் தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர் அப்பாஸ். இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஒரு சில காரணத்தால் இவர்களுடைய காதல் முறிந்தது.
இதை தொடர்ந்து நடன இயக்குனர் ராஜு சுந்தரமும் சிம்ரனும் காதலிப்பதாக கூறப்பட்டது. இந்த காதலும் தோல்வியில் தான் முடிந்தது.
பின் நடிகர் கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்த போது இவர்கள் இருவரும் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால் இதுகுறித்து சிம்ரன் ஒரு பேட்டியில் கூறுகையில் , கமல்ஹாசனின் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவருடன் பேசப்பட்டேன். ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிம்ரம் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள துருவநட்சத்திரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
