ரஜினியின் சிவாஜி பட நாயகி ஷ்ரேயா தன்னுடைய பெண் குழந்தையுடன் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

முதலில் கதக் மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற நடனத்தை சிறந்து விளங்கிய ஷ்ரேயா, உலகின் சிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான ஷோவனா நாராயணனிடம் பயிற்சி பெற்றார். நடன பிரபலமானதைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவரது முதல் தெலுங்கு படம் இஷ்டம் 2001-ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தத் திரைப்படம் அப்போது மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு, ஸ்ரேயாவையும் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.நடிகை ஸ்ரேயா நடிப்பது மட்டுமின்றி, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் மும்பையில் பார்வையற்றவர்களுக்காக ஒரு ஸ்பாவினைத் திறந்தார். இது முழுவதும் பார்வையற்றவர்களால் நடத்தப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மேலும் மெருகேறிய அழகுடன் ஷ்ரேயா செய்து வரும் போஸ்ட் அவ்வப்போது வைரலாக. அந்த வகையில் தனது குலேந்தியுடன் ஷ்ரேயா விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

View post on Instagram