பிடிச்சா...."இப்படிப்பட்ட ஆம்பளைய பிடிக்கணும்"... ஸ்ருதிஹாசன் அதிரடி..!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், லேடீஸ் பிடிச்சா இப்படிப்பட்ட ஆம்பளைய பிடிக்கணும் என அவருடைய நண்பர் புகைப்படத்தை பதிவிட்டு அதிரடி கிளப்பி உள்ளார்.

மிகவும் பிசியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது தனது இங்கிலாந்து நண்பரான மைக்கல் கார்ஸ்லே உடன் ஊர் சுற்றி வருகிறார். அவருடன் ஷாப்பிங் மால் சென்று பர்சேஸ் செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.அவர் பதிவிட்டு உள்ள போட்டோவில், அவரது நண்பர் கை முழுக்க ஷாப்பிங் பேக் வைத்தவாறு, தோளில் சுமந்தபடி உள்ளார். 

இந்த போட்டோவை, சுருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதை கண்ட, ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக,ஸ்ருதிக்கு ஒரு அடிமை சிக்கிடிச்சி என கிண்டலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்ருதியும் அவரது நண்பரும் நீண்ட வருடமாக பழகி வருகிறார்கள். இவர்களின் பழக்கம் காதல் தான் என அவர்களது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.