நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை லண்டனில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். லண்டனில் உள்ள நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய மகிழ்ச்சியில், நடு ரோட்டில் துள்ளி குதித்து, குழந்தை போல இவர் செய்த செய்கைகளும், அவர் ஆடிய நடனமும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். குளிர்காலத்திற்கு ஏற்ற போல் உடை, குல்லா, மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ போன்றவை அணிந்துள்ளார்.

இந்த டான்ஸை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, "எனது இனிய பிறந்தநாள் நடனம். இன்றைய தினத்தை, மிகவும் நேசிக்கிறேன், நன்றி செலுத்துகிறேன், மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்! நான் மிகவும் அதிஷ்டமான பெண். எனவே இதனை கொண்டாட ஒரு நடனம் உங்களுக்கு.

இன்று எனக்காக என்னுடைய சமூக வலைத்தளத்தில், வாழ்த்திய ஆன்லைன் குடும்பத்திற்கும், லண்டனில் உள்ள எனது அன்பான நண்பர்களுக்கும் நன்றி. இங்கு அமைதியாகவும், அழகாகவும் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளேன் என கூறியுள்ளார்.

வைரலாகிவரும் ஸ்ருதியின் டான்ஸ் இதோ...

View post on Instagram