நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த ஒரு வருடமாக லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய காதலுக்கு தந்தை கமலஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் மைக்கேல் கோர்சால் மீது உள்ள காதல் பற்றி, பல முறை ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும் அவர் ஒரு முறை கூட பதிலளித்தது இல்லை. இது என் சொந்த விஷயம்... அது குறித்து பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை என பல முறை பத்திரிகையாளர்கள் மூஞ்சில் அடித்தது போல் பதில் கொடுத்துள்ளார். 

மேலும் காதலை உறுதி செய்யும் விதத்தில், தந்தை மற்றும்  மைக்கேளுடன் சேர்ந்து திருமண  ஒரு முறை கலந்து கொண்டார். அதே போல் அவ்வப்போது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, தற்போது ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலை முறித்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... 'மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்' என தத்துவார்த்தமாக பதிவு செய்துள்ளார். 

மேலும் வாழ்க்கை உலகின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து துரதிர்ஷ்டவசமாக நம்மை காப்பாற்றுகிறது... எனவே நாம் தனியாக இருப்பதுபோல் நடக்க வேண்டும்,  எப்போதும் ஒரு நண்பராக அவர் எனக்கு இருப்பார் என்று நினைக்கின்றேன்" என்று கூறியுள்ளார். 

எப்படியும் இந்த வருடம் ஸ்ருதிஹாசன் அவருடைய காதலரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.