நாளுக்கு நாள் மீடூ சர்ச்சையில் சிக்கும் நடிகர்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நேற்றைய தினம், பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் நடிகை ஸ்ருதி. அவரை தொடர்ந்து இன்று பிரபல நடிகரும், நடிகர் பிரஷாந்தி தந்தை தியாகராஜன் மீது இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். 

இந்நிலையில்... நடிகர் அர்ஜுன் 'நிபுணன்' படப்பிடிப்பின் மீது தன்னுடைய முதுகை தொட்டு, அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ மூலம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகாரை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நிபுணன். இதில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடித்திருந்தார். இவர் கன்னடத்தில் பிரபலமான நடிகை என்றாலும் தமிழில் அறிமுகப்படம் இதுதான்.

இவர் முதலில் சிறு அளவிலான பாலியல் குற்றச்சாட்டை வெளிப்பதிய இவருக்கு, நடிகர் அர்ஜுன் பதிலடி கொடுக்கும் விதத்தில், நடிகை ஸ்ருதி கூறுவது முற்றிலும் பொய் என்றும், அப்பட்டமாக தன் மீது இவர் குற்றம் சாட்டியுள்ளதால், ஸ்ருதி மீதி மான நஷ்டஈடு வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்...  அதில், “மீ டூ இயக்கம்  மிகச் சரியான சமயத்தில் வந்துள்ளது. இது பாலியல் வக்கிரம் படைத்த நமது சமூகத்திடமிருந்து பெண்களை மீட்க உதவும். அதற்கு இந்த மீ டூ ஒரு நல்ல முயற்சியாகும். எனது அமைதியைக் கலைக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

பலமுறை நான் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்சினைதான் எனக்கும் வந்தது. தேவையில்லாத ஆபாசப் பேச்சுகள், வக்கிர செய்கைகள், சைகைகள் என நான் பல அத்துமீறல்களைச் சந்தித்துள்ளேன். இதனால் நான் பலமுறை அசௌகரியமாக உணர்ந்துள்ளேன்.

நான் பலமுறை இதுபோல சந்தித்திருந்தாலும், அதனால் நான் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் 2016ஆம் ஆண்டு மனதளவில் பெரும் அதிர்ச்சியைச் சந்திக்க நேரிட்டது. 

பிரபல அர்ஜுன்  நடித்த 'நிபுணன்' படத்தில் நான் நாயகியாக நடித்தேன். இவருடைய படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். இவருடன் நடிப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷப்பட்டேன். சில நாட்கள் இயல்பாகப் போனது. அவருடைய மனைவியாக அந்தப் படத்தில் நான் நடித்தேன். கதைக்குச் சில ரொமான்டிக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இருவரும் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும். இந்தக் காட்சிகளுக்குரிய ஒத்திகையின்போது அர்ஜுன் என்னைக் கட்டிப்பிடித்தார். அப்போது தேவையில்லாமல் என்னை இறுக்கி அணைத்தார். என்னை நெருக்கமாக நிறுத்திக் கொண்டார். எனது முதுகில் கையை வைத்து மேலும் கீழுமாக தடவினார்.

ஆனால், அவரிடம் என்னால் எனது கோபத்தைக் காட்ட முடியவில்லை. இதற்காக உள்ளுக்குள் நான் வெந்து போனேன். அவரது செயல்கள் அனைத்துமே அவரது மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.

மேலும், தன்னிடம் மிகவும் நெருங்கி வந்து இரட்டை அதன் பேசி, விருந்துக்கு செல்லலாமா என கேட்டார். தன்னை அவருடைய அறைக்கு அழைத்து, செக்ஸ் டார்ச்சர் செய்தார் என கூறியுள்ளார்.