பிரபல நடிகை ஸ்ரேயாவின் முன்னழகை லைவ் சாட்டில் கணவருக்கு முன்பே, ரசிகர் ஒருவர் வருணிக்க, அதற்கு ஆமாம் அவரின் முன்னழகு மிகவும் அழகானது என பதில் கொடுத்துள்ளார். 

தெலுங்கு திரைப்படங்கள் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் 'உனக்கு 20 எனக்கு 18 ' படத்தின் மூலம் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார்.  த்ரிஷா நாயகியாக நடித்த இந்த படத்தில், அவரையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கவர்ச்சியை காட்டி தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் ஸ்ரேயா.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். கிட்ட தட்ட 10 வருடங்களாக, முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், கடைசியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, AAA படத்தில் நடித்தார்.

ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, இந்த படம் தோல்வி அடைந்ததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவெடுத்தார்.

அதன் படி, ரஷ்யாவை சேர்ந்த காதலர் ஆண்ட்ரு என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, பின்னர் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு அறிவித்தார். தற்போது தன்னுடைய கணவர் ஆண்ட்ருவுடன், ஸ்பெயினில் வசித்து வருகிறார் ஸ்ரேயா. 

சமீபத்தில் கூட, கணவர் ஆண்ட்ரு தனக்கு வீட்டு வேலைகள் செய்ததற்கு அன்பு பரிசாக முத்தம் கொடுக்கும் வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் வைரலாகியது.

இதை தொடர்ந்து, தற்போது ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ருவுக்கு திடீர் என கொரோனா ஏற்பட்டு குணமடைந்ததாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில், ஸ்ரேயா கணவருடன் சேர்ந்து லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசினார்.

அப்போது ரசிகர் ஒருவர், நடிகை ஸ்ரேயாவின் முன்னழகை பற்றி கணவர் முன்பே வருணிக்க, அதற்கு அவருடைய கணவர் ஆண்ட்ருவும், ஆமாம் அவருடைய மார்பகங்கள் மிகவும் அழகானது என பதில் கொடுத்தார்.

கணவரிடம் இருந்து இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரேயா செல்லமாக ஒரு அடி அடித்தார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது..