பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாட்கள் ஆகிறது.  தற்போது வரை எந்த பிரச்சனையும் இல்லாமல், 15 போட்டியாளர்களும் சமரசமாக அன்போடு பழகி வருகிறார்கள்.  

இப்போது அமைதியாக சென்றுகொண்டிருந்தாலும், விரைவில் இந்த வீட்டில் கருத்து வேறுபாடில் துவங்கி, சிறுசிறு பிரச்சனைகள், கிசுகிசு, பின்னல் சென்று ஒருவரை பற்றி மற்றொருவர் பேசுவது என பல  காரணங்களுக்காக சண்டை வர வாய்ப்பு உள்ளது.

 

எப்போது இதுபோன்ற பிரச்சனைகள் வெடிக்கும் என்பதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதே போல் இதுவரை, தொலைக்காட்சி மூலம் மட்டுமே பார்த்த சில பிரபலங்கள் 100 நாட்கள் உண்மையான குணத்தோடு எப்படி இருக்கின்றனர், என்பதை காண்பதற்காகவும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே தனுஷுடன் துள்ளுவதோ இளமை, ஸ்டூடன்ட் நம்பர் 1 , போன்ற படத்தில் நடித்துள்ள நடிகை ஷெரின், சூசகமாக ஃபேஸ்புக் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்,  "பயணத்திற்காக ஆர்வமாக உள்ளேன், ஆனால் ஒரு இடத்தில் என்னால் அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்க முடியாது.  பதற்றமாக உணர்வதாக கூறியுள்ளார். "இந்த பதிவு தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.